தகவல் அறியும் (திருத்த) சட்டம், 2019 குறித்த பகுப்பாய்வு
முன்னுரை:
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மசோதா, 2004 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அது யூனியன் அரசாங்கத்திற்கு மட்டுமே பொருந்தும் என்ற வகையில் வடிவமைக்கப்பட்டது. எனவே, சிவில் சமூகம் மசோதாவிற்கு எதிரான போராட்டத்தை தொடங்கியது. ஏனெனில் ஒரு சாதாரண மனிதருக்கு தகவல், மாநில அரசிடமிருந்து பெறபடவேண்டும். ஆகையால் 150 திருத்தங்களுக்கு பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் குடிமகனின் நலனுக்காகவும், அரசாங்கத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையுடன் பொறுப்புணர்ச்சியும் வழங்கப்பட வேண்டும் என்பதும், குடிமக்களுக்கு சரியான தகவலை வழங்குவதும், நமது ஜனநாயகம் மக்களுக்கு பணி புரிவதும் ஆகும். திரு குல்வால் (எதிர் ) ஜெய்ப்பூர் மாநகராட்சி (1986), இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கூறுவது என்னவென்றால், இந்திய அரசியலமைப்பின் 19வது பிரிவின் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பெறப்படுகிறது, எனினும் தகவல் அறியும் உரிமை இல்லாமல் பேச்சுரிமையை குடி மக்களால் முழுமையாக பயன்படுத்த இயலாது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இல் 31பிரிவுகள், 6 அத்தியாயங்கள் மற்றும் 2 அட்டவணைகள் உள்ளன. அவை பொது அதிகாரத்தின் கடமைகள், மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையர் அதிகாரங்கள் போன்றவை கையாளுகிறது. அஞ்சலி பரத்வாஜ் & ஒ.ஆர்.எசஸ் (எதிர்) இந்திய யூனியன் (2019), இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியது யாதெனில் தகவல் அறியும் உரிமை சட்டம் துணை தேவைக்கு மட்டுமல்லாமல், பேச்சுரிமையை உறுதிசெய்யவும் இயற்றப்பட்டுள்ளது. மேலும், நல்லாட்சி என்பது ஜனநாயக இந்தியாவின் இன்றியமையாத பகுதியாகும். இது சட்டத்தை முறையாக அமல் படுத்துவதன் மூலம் பெற வேண்டும் ,தேசத்தின் வளர்ச்சிக்கு அது அவசியம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய திருத்தம் 2019 ஆம் ஆண்டில், அரசாங்கம் தகவல் அறியும் உரிமை (திருத்த) மசோதாவின் மூலம் அறிமுகப்படுத்தியது. அந்த மசோதாவில் மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையரின் சம்பளம் மற்றும் தேவை நிலைமைகளை நிர்ணயிக்க மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமே அதிகாரங்களை வழங்குமாறு மக்களவை முன் சமர்பித்தது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் திருத்தங்கள், 2005
பிரிவுகள் | திருத்தத்திற்கு முன் | திருத்தத்திற்குப் பிறகு |
பிரிவு 13 – மத்திய தகவல் ஆணையத்தின் அலுவலக விதிமுறைகள் மற்றும் சேவை நிபந்தனைகள். | காலம்: மத்திய தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் 5 ஆண்டுகள் அல்லது (65 வயது வரை எது முந்தையதோ) சம்பள அளவு: தலைமைத் தகவல் ஆணையர் தலைமைத் தேர்தல் ஆணையரின் அதே சம்பளம் மற்றும் சலுகைகள் பெறுவார். கழிவுகள்: பிரிவின் வழங்கப்பட்ட பகுதியில், மத்திய தகவல் ஆணையர் அல்லது தகவல் ஆணையர் முந்தைய அரசாங்க வேலைகளுக்கு ஏதேனும் ஓய்வூதியம் அல்லது பிற ஓய்வு ஊதியம் சலுகைகள் பெற்றால் அந்த தொகை சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் என்று கூறுகிறது. | காலம்: திருத்தம் முன்மொழிவது என்னவென்றால், அத்தகைய காலத்திற்கான நியமனம் மத்திய அரசால் பரிந்துரைக்கப்படும் அல்லது (65 ஆண்டுகள் வரை எது முந்தையதோ). சம்பள அளவு: இந்தத் திருத்தத்தில் சம்பளம் மற்றும் பிற சேவைகள் மத்திய அரசால் பரிந்துரைக்கப்படும் என்று முன்மொழியப்பட்டது. மசோதா இந்த ஏற்பாட்டை நீக்குகிறது. |
பிரிவு 16 – மாநில தகவல் ஆணையத்தின் பதவிக் காலம் மற்றும் சேவை நிபந்தனைகள். | காலம்: மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில அளவில் பிற தகவல் ஆணையர் 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் அல்லது (65 வயது எது முந்தையதோ). சம்பள அளவு: மாநில தலைமை தகவல் ஆணையருக்கான சம்பளம் மற்றும் பிற சேவைகள் தேர்தல் ஆணையர்கு சமம் மற்றும் பிற தகவல் ஆணையருக்கு மாநில அரசின் செயலாளருக்கு சமம். கழிவுகள்: பிரிவின் வழங்கப்பட்ட பகுதியில், மாநில தகவல் ஆணையர் அல்லது தகவல் ஆணையர் முந்தைய அரசாங்க வேலைகளுக்கு ஏதேனும் ஓய்வூதியம் அல்லது பிற ஓய்வு ஊதியம் சலுகைகள் பெற்றால் அந்த தொகை சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் என்று கூறுகிறது. | காலம்: திருத்தம் முன்மொழிவது என்னவென்றால், அத்தகைய காலத்திற்கான நியமனம் மத்திய அரசால் பரிந்துரைக்கப்படும் அல்லது (65 ஆண்டுகள் வரை எது முந்தையதோ). சம்பள அளவு: இந்தத் திருத்தத்தில் சம்பளம் மற்றும் பிற சேவைகள் மத்திய அரசால் பரிந்துரைக்கப்படும் என்று முன்மொழியப்பட்டது. மசோதா இந்த ஏற்பாட்டை நீக்குகிறது. |
திருத்தம் பற்றிய விமர்சனங்கள்:
எல்லாவற்றையும் மத்திய அரசே முடிவு செய்யும் என்பதால் இம் மசோதா மத்திய அரசுக்கு முழு அதிகாரத்தை அளித்தது. எனவே, தகவல் ஆணையர்கள் அரசாங்க ஊழியர்களை போலவே நடந்துகொள்வார்கள் அப்பொழுது ஏதேனும் தகவல் அரசாங்க ஊழியர்களுக்கு எதிராக இருந்தால் அத்தகைய தகவல்களை தடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது பிரிவு 19(1)-ன் வழங்கப்பட்ட தகவல் அறியும் உரிமையை தடுக்கவல்லதாகும். இந்த திருத்தம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தை அர்த்தமற்றதாக ஆக்குகிறது. முன்மொழியப்பட்ட திருத்தம் உச்சநீதிமன்ற நீதிபதியாக, மத்திய தகவல் ஆணையர் இந்நிலையை நீக்குகிறது. மேலும் இது அதிகாரிகளின் அதிகாரத்தைக் குறைத்து அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவிப்பு வெளியிடுவதை தடுக்க வல்லதாக உள்ளது. நிறைவேற்றிய தகவல் அறியும் (திருத்த) மசோதா 2019 க்கு ஆதரவாக 218 உறுப்பினர்களும் அதனை 79 உறுப்பினர்கள் எதிர்த்தனர். மேலும் அது பொது ஆலோசனை இன்றி நிறைவேற்றப்பட்டது சட்டத்தை உருவாக்குவது பிரதிநிதிகளிடம் மட்டும் விட முடியாது. தகவல் ஆணையம் அதிகாரம் மற்றும் சுதந்திரம் இரண்டையும் கொண்டிருந்தால்தான் அனைத்து தகவல்களையும் மக்களுக்கு வெளிப்படுத்த முடியும்.
இந்தத் திருத்தம் ஜனநாயக நாட்டில் முக்கியமான பொருளாக இருக்கக்கூடிய வெளிப்படைத்தன்மையை பறிக்கும். இப்போது ஒவ்வொரு அதிகாரமும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் மேலும், ஒருதலைபட்சமாக முடிவுகளை எடுக்க நேரிடும் ஆகையால் இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை யோசனையும், கட்டமைப்பையும் பலவீனமாகும்.
இந்தத் திருத்தம் தொடர்பாக அரசாங்கத்தின் நியாயங்கள்:
தேர்தல் ஆணையம் மற்றும் தகவல் ஆணையத் உடைய கொள்கை செயல்படுத்தும் திறன் வேறுபடக் கூடியது ஆதலால் இரண்டினையும் ஒன்றாக கருத முடியாது. தேர்தல் ஆணையம் இந்திய அரசியலமைப்பின் 324 ஆவது சரத்தின் கீழ் அமைக்கப்பட்டது இது அரசியல் அமைப்பாகும் மறுபுறம் தகவல் அறியும் ஆணையம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது இது ஒரு சட்டரீதியான அமைப்பாகும். எனவே அவற்றின் நிலை மற்றும் நிபந்தனைகள் அதற்கேற்ப நியாயப்படுத்த வேண்டும். மேலும், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அரசாங்க அதிகாரிகளுக்கு விதிமுறை உருவாக்கும் அதிகாரத்தை வழங்கப்படவில்லை. மத்திய தகவல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதி என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது, ஆனால் அவரது தீர்ப்பை உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யலாம் அது எப்படி சாத்தியமாகும். எனவே அரசாங்கம் இந்த விதிகளை திருத்த மசோதாவின் மூலம் திருத்துகிறது. ஆகையால் ஒட்டுமொத்த தகவல் அறியும் உரிமை சட்டத்தை வலுப்படுத்தவும் மற்றும் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டுள்ளதாய் மாற்றவும் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது.
முடிவுரை:
இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை ஊக்குவித்தல் மற்றும் குடிமக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதாகும். ஆனால், இந்த நோக்கம் 2019 ஆவது திருத்தத்தில் சேதமடைந்துள்ளது. பொதுமக்களுக்கு அதிக அளவில் தகவல்களை வழங்க தகவல் ஆணையம் சுயாதீனமாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது அது மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது மற்றும் எந்தவொரு செயலுக்கும் மத்திய அரசுக்கு பதிலளிக்க வேண்டும். இந்தத் திருத்தத்திற்கு அரசாங்கம் எந்த நம்பகமான காரணத்தையும் வழங்கவில்லை மற்றும் சட்டத்தின் நோக்கத்தை பலவீனப்படுத்தியது.
By – M Preetha (Intern)