தகவல் அறியும் (திருத்த) சட்டம், 2019 குறித்த பகுப்பாய்வு முன்னுரை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மசோதா, 2004 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அது யூனியன் அரசாங்கத்திற்கு மட்டுமே பொருந்தும் என்ற வகையில் வடிவமைக்கப்பட்டது. எனவே, சிவில் சமூகம் மசோதாவிற்கு எதிரான போராட்டத்தை தொடங்கியது. ஏனெனில் ஒரு சாதாரண மனிதருக்கு தகவல், மாநில அரசிடமிருந்து பெறபடவேண்டும். ஆகையால் 150 திருத்தங்களுக்கு பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் குடிமகனின் நலனுக்காகவும், அரசாங்கத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்…
